
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவை – லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
கல்கிஸையிலுள்ள சஞ்சய சமரசிங்கவின் வீட்டில், ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, அங்கு ஒரு பாதுகாப்புப் பெட்டி (safe) கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, குறித்த இடத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், அந்தப் பாதுகாப்புப் பெட்டியையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி தொடர்பாக, அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் – அவரை இன்று கைது செய்தனர்.



