
– எம்.சி.எம். ஷம்சுல் முனா –
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தரும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஏற்பாட்டில் குளிசை ‘பக்கட்’கள் வழங்கி வைக்கப்பட்டன.
வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முதற்கட்டமாக ஒரு தொகுதி ‘பக்கட்’கள் நேற்று (17) வழங்கி வைக்கப்பட்டன.
இவற்றை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எஸ். அகிலன் மற்றும் டொக்டர் எம்.ஏ. பர்ஹானா உள்ளிட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் நலனுக்காகச் சமூகப் பணிகளை தொடர்ச்சியாக ரஹ்மத் பவுண்டேஷன் முன்னெடுத்து வருகிறது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள், ரஹ்மத் பவுண்டேஷனின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



