தலைப்புச் செய்திகள்

அடுத்த ஆண்டுக்குள் 30,000 ஆசிரியர்கள் நியமனம்; வரும் நொவம்பர் நேர்முகப் பரீட்சை ஆரம்பமாகும்: பிரதமர் தெரிவிப்பு

கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்களை – அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சேர்ப்பதற்கான திட்டங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அறிவித்தார். இதில், இந்த ஆண்டிலேயே 23,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பதுளையில் நடைபெற்ற ‘தேசிய மக்கள் சக்தி’ மகளிர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், 23,000 பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகப் பரீட்சை இந்த ஆண்டு நொவம்பர் 20ஆம் திகதி தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கல்விக்கல்லூரிகளில் டிப்ளோமா பட்டம் பெற்ற 6,000 பேர், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் கல்விச் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இவர்களுடன், கல்வி இளங்கலை (BEd) தகுதி பெற்றவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 30,000 புதிய ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.