தலைப்புச் செய்திகள்

சீமெந்து லொறி, பல வாகனங்களுடன் மோதி கோர விபத்து: அக்குரணையில் சம்பவம்

அகுரணைப் பகுதியில் கண்டி – மாத்தளை வீதியில், சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியொன்று, பல வாகனங்கள் மீது மோதியதில், குறைந்தது 06 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அகுரணையில் 7-வது கிலோமீட்டர் கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் சீமெந்து லொறியுடன் மேலும் பல வாகனங்கள் சிக்கியுள்ளன.

காயமடைந்தவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினால் கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.