தலைப்புச் செய்திகள்

Update: 04 பேர் உயிரிப்பு; அகுரணை கோர விபத்தில் சோகம்

அக்குரணை – குருகொட பகுதியிலுள்ள கண்டி – மாத்தளை பிரதான வீதியில், நடந்த வீதி விபத்தில் பல வாகனங்கள் சிக்கியதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கண்டி – மாத்தளை பிரதான வீதியின் 7-வது கிலோமீட்டர் கல் அருகே, சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து, கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது, இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.