மஹிந்தவின் பெயரைக் கூறி மைத்திரியை வரவேற்ற செயலாளர்; அசடு வழிந்து மன்னிப்புக் கோரினார்

🕔 March 7, 2016

Wijayaratne - 023னாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயர் சொல்லி வரவேற்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறிய, விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன அசடு வழிந்து, மன்னிப்புக் கோரிய சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

‘நச்சுத்தன்மையற்ற நாடு’ எனும் தலைப்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், விவசாய மற்றும் கல்விக் கண்காட்சி இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதன்போது, வரவேற்புரை நிகழ்த்திய விவசாய அமைச்சின் செயலாளர் பி. விஜேரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று சொல்வதற்குப் பதிலாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று கூறினார்.

ஆயினும், மேடையில் இருந்தவர்கள் இந்தத் தவறினை உடனடியாக அவருக்குச் சுட்டிக்காட்டியமையினை அடுத்து, அசடு வழிந்த நிலையில் மன்னிப்புக் கோரி விட்டு, மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவை பெயர் சொல்லி வரவேற்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்