
இரத்தினக்கல் திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டு விசாரணையில் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை, இரத்தினபுரி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இரத்தினக்கல் திருட்டுப் புகார் தொடர்பான விசாரணையின் போது, வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களுக்குச் சொந்தமான பணத்தை வலுக்கட்டாயமாகப் பறித்து, அதை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் – சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் நேற்று (03) இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எஹெலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டின் பேரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


