தலைப்புச் செய்திகள்

போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3020 பேர் பலி

லெபனானில் மார்ச் 02ஆம் திகதி தொடக்கம் – இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 3020 பேர் உயிரிழந்துள்ளனர் என, லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், அதிகமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – லெபனான் நாடுகளுக்கிடையில் ஏப்ரலில் யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், மேலும் 45 நாட்களுக்கு போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இரண்டு நாடுகளும் அமெரிக்காவில் வைத்து மூன்று நாட்களுக்கு முன்னர் ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.