
துருக்கியில் இன்றும் (15) பாடசாலையொன்றில் மாணவர் ஒருவரும் சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று செவ்வாய்கிழமை உயர்நிலை பாடசாலையொன்றில், முன்னாள் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 பேர் காயமடைந்தனர். அந்த சம்பவம் நடந்து மறுநாள் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இன்று நடந்த தாக்குதலில் மூன்று மாணவர்களும், ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் நடத்தினார்.

தாக்குதலை நடத்திய மாணவரும் உயிரிழந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நடந்த குழப்பத்தில் ஏதாவது நடந்தததா எனத் தெரியவில்லை.
நேற்றைய சம்பவத்தின் போது – துப்பாக்கிச் சூடு நடத்டதிய முன்னாள் மாணவர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


