காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை
ஜாஎல பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத இருவர் 15 லட்சம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த நிறுவனத்தின் காசாளர், மேற்படி பணத்தொகையோடு நிறுவனத்திலிருந்து வாகனத் தரப்பிடத்துக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இருவர் காசாளரின் கையை வெட்டி காயத்தினை ஏற்படுத்தி விட்டு, மேற்படி பணத்தொகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பணத்தை கொள்ளையிட்டவர்கள், மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
கை வெட்டப்பட்ட காசாளர், காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.