
மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் இன்று (25) காலமானார். அவருக்கு 75 வயது.
நிந்தவூரைச் சேர்ந்த சலீம் 50 வருடங்களுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் மற்றும் சக்தி தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றினார்.
மேலும் பத்திரிகைகளில் அரசியல் உள்ளிட்ட கட்டுரைகளையும் அவர் எழுதி வந்தார்.
பல்வேறு ஊடக அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்த மூத்த ஊடகவியலாளர் சலீம், ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காக – பல தடவை கௌரவிக்கப்ட்டார்.
இவரின் மறைவு குறித்து ஊடக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது கவலைகளை வெளியிட்டுள்ளனர்.



