ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம்
அமைச்சர் ஜோன் அமரதுங்க – காணி அமைச்சராக இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
காணி அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன மரணமடைந்தமையினை அடுத்து, அவர் வசமிருந்த காணி அமைச்சுப் பதவி, இன்றைய தினம் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளனது.
ஏற்கனவே, ஜோன் அமரதுங்க – சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ விவகார அமைச்சராகப் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1940 ஆம் ஆண்டு பிறந்த ஜோன் அமரதுங்க ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கம்பஹா மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்.