தலைப்புச் செய்திகள்

நாட்டில் பண வீக்கம் அதிகரிப்பு

நாட்டில் மொத்த பணவீக்க வீதம், 2025 நொவம்பரில் 2.4% ஆக இருந்த நிலையில், டிசம்பர் 2025 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) இது அளவிடப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் நொவம்பரில் 3.6% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 4.4% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உணவு அல்லாத குழுவின் ஆண்டு பணவீக்கம் நொவம்பரில் 1.5% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 2025 க்கான அனைத்து பொருட்களுக்கான தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 210.5 ஆக உள்ளது. நொவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது – குறியீட்டு புள்ளிகளில் 3.3 அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை குறிப்பிட்டுள்ளது.