பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம்

🕔 March 1, 2016

PRECIFAC - 098பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அந்தப் பதவியில் இருந்த லெசில் டி. சில்வா உடனடியாகப் பதவி நீக்கப்பட்டமையைத் தொடர்ந்து, புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பி.பீ அபேசுந்தவின் கையெழுத்துடன் கூடிய பதவி நீக்கக் கடிதம் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், ஆயினும், அதற்கான காரணம் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனவும் லெசில் டி சில்வா ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே, எச்.டப்ளியூ. குணதாஸ – பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னார், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ கடமையாற்றியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்