
ஊடகவியலாளர் ஏ.எம். தாஜ் கலாபூஷண் (Kalabooshan) விருது பெற்றுள்ளார். பல்துறை சாதனையாளர் பிரிவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த, சமய விவகார கலாசார அமைச்சின் ஏற்பாட்டில், 40ஆவது அரச விருது வழங்கும் விழா இன்று திங்கட்கிழமை இன்று (12) அலறி மாளிகையில் நடைபெற்ற போது, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, தலைமையிலும் நடைபெற்ற இந்த விழாவில், பிரதியமைச்சர்கள்முனீர் முலபர், கமகெதர திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் முஸ்லிம்கள் கலைஞர்கள் 05 பேருக்கும், தமிழ் கலைஞர்கள் 27 பேருக்கும், சிங்கள கலைஞர்கள் 167 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இன்று கலாபூஷண் (Kalabooshan) விருது பெற்ற ஏ.எம் தாஜ் – கவிஞர், வானொலி அறிவிப்பாளர், தொலைக்காட்சி ஊடகவியலாளர் மற்றும் ஓவியர் என பல தளங்களில் புகழ்பெற்றவராவார்.
2004ஆம் ஆண்டு ரூபவாஹினியில் இவர் தொகுத்து வழங்கிய ‘சதுரங்கம்’ எனும் அரசியல் நிகழ்ச்சி மூலம் – தாஜ் பெரிதும் பேசப்பட்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறைப் பட்டப்படிப்பை முடித்த ஏ.எம். தாஜ் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘தினகரன்’ பத்திரிகையில் அ.ச. சித்தி றிஜா எழுதிய இரண்டு நாவல்களுக்கு, தாஜ் தொடராக ஓவியம் வரைந்தார்.
தாஜ் – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ஊர் மொழி நடையில் நகைச்சுவைகளை
மிகவும் ரசனையாகச் சொல்வார்.
நான் எழுதி வரும் ‘அக்கரைப்பற்று பகிடிகளில்’ கணிசமானவை, நண்பர் தாஜ்-உடன் உரையாடும் போது கிடைத்தவைதான்.
தாஜ்-இடம் நான் வியக்கும் மற்றொரு விடயம், அவரின் நினைவாற்றல். எப்போது நடந்த சம்பவங்களையும் திகதியுடன் சொல்வார்.



