
தங்காலையில் இன்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாலை 6.55 மணியளவில் உனகுருவ – கபுஹேன சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் தம்பதியினரை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரியவருகிறது.
விசாரணைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


