குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை: நாமல்

🕔 February 27, 2016
Namal Rajapaksa - 0986ற்போதைய ஆட்சியில் தன்மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, தான் கணக்கில் எடுக்கவில்லை என்றும், வழமைபோல் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகோதரர் யோஷித்த ராஜபக்ஷ மீதும், தன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதாலேயே, அதுபற்றி தான் கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பில், தான் கைது செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது சகோதரர் யோஷித்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தே நான் தற்போது கவனம் செலுத்தி வருகின்றேன்.

நாங்கள் திருடர்கள், மோசடியாளர்கள் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மை, என்றோ ஒரு நாள் தெரியவரும்.

குற்றம் செய்யவில்லை என்பதால், குற்றச்சாட்டுக்கள் குறித்து அச்சமடையவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்