
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018 இல் சுமார் 328,400 ஆக இருந்த – பதிவு செய்யப்பட்ட பிறப்பு எண்ணிக்கை, 2024 இல் 220,761 ஆகக் குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 33% சரிவாகும்.
கொவிட் தொற்றுநோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது புதிய பிறப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இது பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிகக் குறைந்த சரிவாகும்.
இது குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கல்வி அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜெயந்த, பிறப்பு வீழ்ச்சியைக் காட்டும் சுகாதார அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி, நாட்டின் பாடசாலைகள் மற்றும் பணியாளர்களுக்கு நீண்டகால விளைவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவு – பிறப்பு வீதத்தில் சரிவை ஏற்படுத்தியது. மேற்படி காரணங்களால், திருமணங்களையும் கர்ப்பம் தரிப்பதையும் ஒத்தி வைக்க நேர்ந்தது.


