வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்

🕔 February 26, 2016
Hisbullah -756
கா
த்தான்குடி ஊர் வீதியினை புனரமைப்புச் செய்து காபட் வீதியாக்கும்  பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய,  நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்காக 50 மில்லியன் ரூபா நிதிவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ். சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த இவ்வீதி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.

அதனையடுத்து,  உடனடியாக இவ்வீதியை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கு அமைய, 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்வீதி புனரமைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.​Hisbullah -755Hisbullah -754

Comments

புதிது பேஸ்புக் பக்கம்