புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

🕔 February 25, 2016

Emil kanthan - 01ல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா நேற்று புதன்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார்.

நீதிமன்றில் நேற்றைய தினம் எமில் காந்தன் சரணடையவிருந்த போதிலும், அவருக்கு எதிராக கோட்டே நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெற்றுக் கொள்ளப்படாத காரணத்தினால், அவரின் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, அவர் எதிர்வரும் 03 ஆம் திகதி நீதிமன்றில் எமில் காந்தன் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளார் என்று அவரின் சட்டத்தரணி அறிவித்துள்ளார்.

மஹந்த ராஜக்ஷ – புலிகளுக்கு பணம் வழங்கிய போது, அந்தப் பணம் எமில் காந்தன் ஊடாகவே பரிமாறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்