ஊடகவியலாளர் எக்னலிகொட கொலை முயற்சி: ஒலி நாடாக்கள் சாட்சியங்களாகின

கிரித்தலே முகாமில் கடமையாற்றிய ராணுவ உத்தியோகத்தர்கள் கொலை தொடர்பில் திட்டமிட்டமை, ஒலிப்பதிவு நடா மூலம் தெரியவந்துள்ளது.
முதல் ஒலி நாடாவிலேயே எக்னெலிகொட கொலை முயற்சி குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி எக்னெலிகொடவை கொலை செய்ய முதற்தடவையாக முயற்சிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் இரண்டாம் சந்தேக நபர் இந்த சூழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இரண்டாம் சந்தேக நபரின் இல்லத்தில் வைத்து, எக்னெலிகொட கொலை தொடர்பில்திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த ஒலிநாடா நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
என்னலிகொட கடத்தப்பட்ட மாதத்தில், முதல் சந்தேக நபர் மட்டக்களப்பிலிருந்து கொழும்புநோக்கி உத்தியோகபூர்வ வாகனத்தில் சென்றுள்மைக்கான சாட்சியங்களும் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்னர்.
இதேவேளை, எக்னெலிகொடவின் சடலமோ உடற்பாகங்களோ கிடைக்காத நிலையில் அவர் கொலை செய்யப்பட்டார் என உறுதிபட எவ்வாறு கூற முடியும் என ஹோமாக நீதவான் ரங்க திஸாநாயக்க புலனாய்வுப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பினார்.
உடற்பாகங்கள் கிடைக்காத காரணத்தினால் சந்தேக நபர்கள் குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அனுமதிப்பது நியாயமாகாது என அரச தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.