தலைப்புச் செய்திகள்

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு: பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் செவெரோ – குரில்ஸ்க் கடலோரப் பகுதியைத் தாக்கிய சுனாமி

ஷ்யாவில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணாக, ரஷ்யா உட்பட உலகின் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ், சீனா, ஹவாய், குவாம், டோங்கா, கலிபோர்னியா, அலாஸ்கா, ஒரிகான், வொஷிங்டன் பிரிட்டிஷ், கொலம்பியா, மெக்சிகோ, பெரு மற்றும் ஈக்வடோர் ஆகிய பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தூர கிழக்கு கடற்கரையில் இன்று (30) புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8:25 மணிக்கு 8.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் அளவு முதலில் 8.0 ஆகவும் பின்னர் 8.7 ஆகவும் அதிகரித்தது. பின்னர், 6.9 ரிக்டர் அளவுள்ள பல அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ரஷ்ய நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியில் கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் கார்கள் தெருக்களில் அசைந்தன. அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, கைத்தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டது.