தலைப்புச் செய்திகள்

ரகசிய வாக்கெடுப்பு கோரிய பிரதேச சபை உறுப்பினர்களின் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது

சீதாவக்க பிரதேச சபையில் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்யும் செயல்முறை தொடர்பான சர்ச்சை குறித்து – தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம், விசாரிக்காமல் தள்ளுபடி செய்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத்தின் முதல் அமர்வின் போது, தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நியமிக்க திறந்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும்மென எழுத்துப்பூர்வ கோரிக்கையை அந்த சபையின் 24 உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்தனர்.

இருப்பினும், மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிக ஜெயசுந்தர, அந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து ஜூன் 17 அன்று ரகசிய வாக்கெடுப்பை நடத்தினார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உட்பட எதிர்க் கட்சிகள், ஆணையாளரின் முடிவு ஜனநாயக செயல்முறையையும் பொது நம்பிக்கையையும் குறைமதிப்புக்கு உட்படுத்துவதாகக் கூறி, வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்குப் பிறகு, கோரம் இல்லாததால், சீதாவக்க பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுக்காததால், அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு, மேல் மாகாண ஆணையாளரின் நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்க இடைக்கால உத்தரவை கோரியும், அதற்கு பதிலாக திறந்த வாக்களிப்பு நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரிக்வை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்துள்ளது.