
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட க.பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு மொத்தம் 478,182 பேர் தோற்றினர். அவர்களில் 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதும், பரீட்சைக்குத் தோற்றியோர் தங்கள் முடிவுகளை பின்வரும் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் வழியாக பார்வையிடலாம்.
– http://www.doenets.lk
– http://www.results.exams.gov.lk
முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு பரீட்சார்த்திகள் தங்கள் குறியீட்டு எண்ணை இரண்டு தளங்களிலும் வழங்கப்பட்ட தேடல் பகுதியில் உள்ளிட வேண்டும்.



