
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17, 2025 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதிக் காலம் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி என்றும், அதன் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 336 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இவற்றில் 28 மா நகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் அடங்கும். இருப்பினும், கல்முனை மாநகர சபை, தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), பூனகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை (காலி மாவட்டம்) ஆகியவற்றுக்கு இதன்போது தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது.
இதேவேளை, கட்சிகள் மற்றும் சுயேற்றைக் குழுக்களிடமிருந்து கட்டுப்பணம் – மார்ச் 03 முதல் மார்ச் 19 நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆயினும் மார்ச் 13 போயா தினம் மற்றும் வார இறுதி நாட்களான மார்ச் 8, 9, 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் கட்டுப்பணம் செலுத்த முடியாது.



