
மாணவர் ஒருவரை தாக்கி – காதில் காயம் ஏற்படுத்திய பாடசாலை அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து.
குறித்த மாணவர் இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ளார்.
மேற்படி அதிபரை 2025 மார்ச் 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹிங்குராகொட பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவிட்டார்.
இதன் போது மாணவர் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மெதிரிகிரிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



