
இஸ்ரேலிய பணயக் கைதிகள் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா மீது ‘நரகத்தை திறந்து விடுங்கள்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் வழிமொழிந்துள்ளார்.
‘ஜனாதிபதி ட்ரம்ப் கூறிய படி – பதில் சரியாக இருக்க வேண்டும்’ என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி, ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘மனிதாபிமான உதவிகளை முற்றிலுமாக நிறுத்துங்கள், மின்சாரம், தண்ணீர் மற்றும் தகவல் தொடர்புகளை துண்டியுங்கள், பணயக்கைதிகள் திரும்பும் வரை மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துங்கள்’.
‘நமது வீரமிக்க படையினர் மீது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல், ஹமாஸுக்கு எதிராக நரகத்தின் வாயில்களைத் திறக்க வேண்டிய நேரம் இது’ என, இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: “நரகம் உடைந்து விடும்”: ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை



