ஞானசாரர் தொடர்ந்தும் உள்ளே; 23 ஆம் திகதி வரை, நீள்கிறது விளக்க மறியல்

🕔 February 16, 2016

Gnanasara - 012பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

காணாமல்போன ஊடகவியலார் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசார  தேரர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டு வருகிறார்.

இன்றைய தினம் ஞானசாரருக்கான விளக்க மறியல் நிறைவுக்கு வந்ததை அடுத்து, அவர் ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது, ஞானசார தேரரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்