தலைப்புச் செய்திகள்

03 லட்சம் மெட்றிக் தொன் நெல்: மூன்றாம் வாரத்திலிருந்து கொள்வனவு ஆரம்பம்

நெல் கொள்வனவுகளை இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிணங்க சுமார் 03 லட்சம் மெட்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

இதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபையிடம் போதுமான நிதி உள்ளது என்றும், தேவையான நிதி விரைவில் ஒதுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு பெறப்படும் நெல் – அரசின் கையிருப்பில் சேமித்து வைக்கப்படும் என்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.