வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

🕔 February 16, 2016

Protest - 08வேலையில்லா பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு – செரமிக் சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்

முன்னிலை சோஷலிஸக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது.

சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது, ஜனாதிபதி செயலகத்தினை நோக்கிச் செல்ல முற்பட்டபோதே, அவர்களைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பகல் 12.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

எனினும், செரமிக் சந்திவரையில் செல்வதற்கு மட்டுமே, மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்