தலைப்புச் செய்திகள்

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் மாவனல்ல பிரதேசத்தில் மூவர் கைது

போதை மாத்திரைகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் மாவனல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவனல்ல ஹீந்தெனிய மயானத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 8,100 போதை மாத்திரைகள், சந்தேகநபர்கள் பயன்படுத்திய வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து வேன் ஒன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் இருவருக்கு விற்பனை செய்யும் போது – சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் 22, 24 மற்றும் 25 வயதுடைய மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.