மசாஜ் நிலையம் எனும் பெயரில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றி வளைப்பு; பெண்கள் நால்வர் கைது

🕔 February 16, 2016

Brothel raid - 089யுர்வேத மசாஜ் நிலையம் எனும் பெயரில் வெலிக்கட பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று நேற்று திங்கட்கிழமை சுற்றி வளைக்கப்பட்டதோடு, அங்கிருந்த பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புத்கமுவ வீதியில் அமைந்துள்ள இந்த விபச்சார விடுதியை பொலிஸார் சுற்றி வளைத்த போது, அங்கிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் விடுதியை நடத்தி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 23, 27, 28 மற்றும் 31 வயதினை உடையவர்களாவர். இவர்கள் நுவரெலியா, புளத்சிங்கல, தெஹியத்த கண்டி மற்றும் ரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று செய்வாய்கிழமை ஹல்ஸ்ட்ரொப் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்