யோசித உள்ளிட்ட ஐவருக்கும் பிணை வேண்டி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்
யோசித ராஜபக்ஷவையும் மற்றும் சீ.எஸ்.என். நிறுவன அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்கள் ஐவரையும், பிணையில் விடுவிக்குமாறு கோரி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை எதிர்த்து, சந்தேச நபர்களின் சட்டத்தரணிகள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த பிணை மனுக்கள் நாளை மறுதினம் 17 ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றில் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட மேற்படி நபர்கள் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.