சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நால்வர், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரண்

🕔 February 15, 2016

Sinhala ravaya - 0234சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் இன்று திங்கட்கிழமை மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் எனும் குற்றச்சாட்டில் இவர்களுக்கு எதிராக நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மேற்படி நால்வரும் சரணடைந்துள்ளனர்.

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை விளக்க மறியலில் வைக்குமாறு, கடந்த 27 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகாமையில் பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்