
பிரதம நீதியரசராக முர்து நிருபா பிந்துஷினி பெனாண்டோ இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்படி அவர் இலங்கையின் 48வது பிரதம நீதியரசராவார். பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி எனும் அடையாளமும் இவருக்கு உள்ளது. அண்மையில் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்குப் பின்னர் நீதியரசர் முர்து பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்த நீதியரசர் முர்து பெர்னாண்டோ, 1997 ஆம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரல் ஆனார். 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவியை வகித்தார். மார்ச் 2018 இல் உச்ச நீதிமன்ற நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். 3
கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.



