தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் படப்பிடிப்பாளருக்கு, முன்னாள் பணிப்பாளர் அச்சுறுத்தல்

னாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து தனக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் வருவதாகக் கூறி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் படப்பிடிப்பாளர் ஒருவர் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், ஜனாதிபதி ஊடகப் பிரிவுவுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, பல ஊடக உபகரணங்கள் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக உள்ளக கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விசாரணைகளின் போது, காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தகவல்களை ​​படப்பிடிப்பாளர் தகவல்களை வழங்கியுள்ளார். இதனையடுத்தே, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து படப்பிடிப்பாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.