
நிலுவையாகச் செலுத்த வேண்டிய வற் வரித் தொகையை நொவம்பர் 30ஆம் திகதிக்குள் செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு கலால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வற் நிலுவையாகச் செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் (350 கோடி) ரூபாயை செலுத்தத் தவறியமைக்காக, அண்மையில் டப்ளியூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 06 மாத சிறைத்தண்டனையை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
2016 மற்றும் 2019ஆண்டு காலப்பகுதிக்கு இடையில், வற் நிலுவைத் தொகை செலுத்தத் தவறியமைக்காக, டப்ளியூ.எம். மெண்டிஸ் & கம்பெனிக்கு எதிராக – உள்நாட்டு வருவாய் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



