எல்பிட்டிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க முடியுமா: மஹிந்த தேசப்பிரிய விளக்கம்

🕔 October 28, 2024

ல்பிட்டிய பிரதேச சபையின் ஆளும் கட்சியாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி எந்தவொரு தடைகளையும் எதிர்கொள்ளாது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களைப் பெற்றது. அதேவேளை, ஏனைய எதிர்க்கட்சிகள் இணைந்து எஞ்சிய 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டன.

இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேசியமக்கள் சக்தி 50% பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாகவும், இதனால் தலைவர் மற்றும் பிரதித் தலைவரை நியமிக்க கட்சியின் செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவருக்கான பெயர்களை தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் பரிந்துரைப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

“தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 50% பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதால், தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு தேவையில்லை” என்றும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

“பிரதேச சபையில் முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணையின் மீதும் வாக்கெடுப்பு நடைபெறும் போது, ​​எதிர்க்கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தால், தலைவர் தனது வாக்கை ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தீர்மானிக்கும் வாக்காக பயன்படுத்த முடியும்” எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்