தலைப்புச் செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்தமை: 24 வருடங்களுக்கு பின்னர் மரண தண்டனை

நபரொருவரை கொலை செய்த குற்றத்துக்காக 24 வருடங்களுக்குப் பின்னர் குற்றவாளிக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் – குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று (16) தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று, பாதிக்கப்பட்டவரை மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்ய திட்டமிட்டதாக – அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் 50 வயதுடைய இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.