
– பாறுக் ஷிஹான் –
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று (10) வேட்புமனுக்களை கையளித்தன.
அதன்படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனுவை கையளித்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டார்.
வழமைபோல் தமிழ் தேசிய முன்னணி இம்முறையும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இதே வேளை தமிழரசுக் கட்சியினரும் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை கையளித்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தமிழரசுக கட்சி சார்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். தமிழரசுக கட்சி அணி வீட்டுச் சின்னத்தில் களமிறங்குகின்றது.



