அத்துமீறிய ஆடு: கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

🕔 February 10, 2016

Goat - 012டு ஒன்று கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட விசித்திர சம்பவமொன்று, இந்தியாவின் சத்தீஸ்கர் – கோரியா பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

நீதிபதி ஒருவரின் தோட்டத்தில், சட்ட விரோதமாக உட்புகுந்து அங்குள்ள பயிர்களை மேய்ந்தாக, மேற்படி ஆடு மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்துல் ஹசன் (வயது 40) எனும் பெயருடைய ஆட்டின் உரிமையாளரும், ஆட்டுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சத்தீஸ்கர் – கோரியா எனும் பகுதியைச் சேர்ந்த நீதிபதி ஹேமந்த் ரத்ரேவின் என்பவருடைய தோட்டக்காரர் வழங்கிய புகாரின் அடிப்படையில், அப்துல் ஹசன் என்பவர் கைது செய்யப்பட்டதோடு, அவரின் ஆடும் கைதானது.

இதுகுறித்து அப்பிரதேச பொலிஸார் தெரிவிக்கையில்; “நீதிபதியின் பங்களாவில் உள்ள இரும்புக் கதவை, இந்த ஆடு தாண்டிக் குதித்து தோட்டத்தில் மேய்ந்து வந்துள்ளது. ஆட்டின் உரிமையாளரிடம் தோட்டக்காரர் பலமுறை எச்சரித்தும் இது தடுக்கப்படவில்லை. எனவே தோட்டக்காரர் அளித்த புகாரின் பேரில் அப்துல் ஹசனையும் அவரின் ஆட்டையும் கைது செய்தோம்” என்றனர்.

‘பெயர் தெரியாத ஆடு மற்றும் அதன் உரிமையாளர் அப்துல் ஹசன்’ என்று போலீஸார் தங்கள் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளனர்.

அத்துமீறி நுழைந்தமை, உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அப்துல் ஹசனுக்கும், அவரின் ஆட்டுக்கும் எதிராக வழங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்துல் ஹசன் மற்றும் அவரது ஆடு மீது மேற்படி குற்றம் நிருபிக்கப்படுமாயின் 02 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம்  விதிக்கப்படலாம்.

எவ்வாறாயினும், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபுல் ஹசனையும் அவரின் ஆட்டையும் நீதிமன்றம் பிணைவில் விடுவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்