தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

🕔 June 13, 2024

தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் – ஜூலை 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார்.

வேதியியல் (Chemistry), இயற்பியல் (Physics), உயிரியல் (Biology), கணிதம், தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 2,100 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான ஆங்கில வழி உயர் டிப்ளோமா பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நியமனங்கள் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை கணிசமாக குறைக்கும் என பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக, ஓய்வு பெற்ற ஆங்கில மொழிமூலமான ஆசிரியர்கள் – ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்