மைத்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவு

🕔 May 30, 2024

நீதிமன்றை அவமதித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், அவருக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று (30) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இததன்போது, மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில், மனுவின் பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி, முன்னாள் ஜனாதிபதி தனது நடவடிக்கையின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்