இஸ்ரேல் நினைத்தது ஒன்று, நடப்பது வேறு: ஜபாலியாவைப் பாதுகாக்க ஹமாஸின் 03 படைப் பிரிவுகள் களத்தில் போராட்டம்

🕔 May 28, 2024
ஜபாலியாவின் குறுகலான தெருவெவொன்றுக்குள் நுழையும் இஸ்ரேலிய போர் டாங்கிகள்

டக்கு காஸாவில் அமைந்துள்ள ஜபாலியா அகதிகள் முகாமைப் பாதுகாப்பதற்காக ஹமாஸின் 03 படைப் பிரிவுகள் போராடி வருவதாக – போர்க் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துனர் என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அப்பகுதியில் ஹமாஸின் ஒரு படைப் பிரிவு உள்ளதாகவே இஸ்ரேல் ராணுவத்தினர் நம்பியதாகவும், ஆனால் அங்கு மூன்று படைப் பிரிவுகள் உள்ளன என்றும் போர் கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இஸ்ரேலின் தற்போதைய ‘மீண்டும் அழிக்கும்’ நடவடிக்கை ஆரம்பித்து இரண்டு வாரங்களில், ஜபாலியாவின் பாதுகாப்பில் – ஹமாஸின் மூன்று படைப் பிரிவுகள் (பட்டாலியன்கள்) பங்கேற்பதை இஸ்ரேலியப் படைகள் இப்போது உணர்ந்துள்ளதாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘திங் டாங்’ எனும் போர் பற்றிய கற்கைகள் நிலையம் (Think tanks the Institute for the Study of War) மற்றும் ‘தி கிரிட்டிகல் த்ரட்ட்ஸ் பிரஜெக்ட்’ (The Critical Threats Project) ஆகியவை கூறியுள்ளன .

காஸா நகரம் மற்றும் காஸா வடக்கில் உள்ள ஹமாஸின் 12 படைப் பிரிவுகள் (பட்டாலியன்கள்) அனைத்தும் ‘தகர்க்கப்பட்டு விட்டன’ என்று, இஸ்ரேலின் போர் அமைச்சரவை உறுப்பினர்கள், மீண்டும் மீண்டும் அறிவித்திருந்த நிலையிலேயே, ஹாஸின் 03 படைப் பிரிவுகள் ஜபாலியாவை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், ஜபாலியாவில் தங்கள் படைகளை மறுசீரமைத்துள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளை, மீண்டும் தகர்க்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறியிருப்பது, “காஸா பகுதியில் நிலையான அரசியல் மற்றும் ராணுவ இறுதி நிலை” எட்டப்படாததை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் – ‘திங் டாங்’ எனும் போர் பற்றிய கற்கைகள் நிலையம் மற்றும் ‘கிரிட்டிகல் த்ரட்ட்ஸ் பிரஜெக்ட்’ ஆகியவை தெரிவித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்