வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்

🕔 April 24, 2024

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேன ஏப்ரல் 05ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக காலமானமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மொத்தம் 38,242 வாக்குகளைப் பெற்ற வீரசேன கமகே, விருப்பு வாக்குகள் அடிப்படையில் 09வது இடத்தைப் பெற்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்