ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம்

🕔 April 23, 2024

க்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தரகுப் பணத்துக்காக அரசாங்கத்திடம் இருந்து மதுபான கடைகளின் உரிமங்களை – தங்கள் கூட்டாளிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும் கண்டி போன்ற சில மாவட்டங்களின் மதத் தலைவர்கள் – விசாரித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமக்கு மதுபான விற்பனை உரிமங்களைப் பெறுவதற்கு உதவிய – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பெயர்களை, வணிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் ஆதரவின் கீழ் – மதுக்கடைகளை திறப்பதற்கான உரிமங்கள் வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே. மேலும், வெவ்வேறு முகாம்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இத்தகைய கடைகளை நேரடியாகவோ அல்லது தங்கள் பினாமிகள் மூலமாகவோ வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், கட்சித் தலைமையின் அனுமதியின்றி அந்தந்த தொகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக – அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்