பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

🕔 March 27, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் நிர்வாகத்துக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோதும், பசில் ராஜபக்ஷ வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு எவரும் தெரிவு செய்யப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்