பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

🕔 March 26, 2024

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.   

பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில் வரையிலான பதவிகளை வகிப்போர் அனைவருக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைபுரிவோர் பற்றி அறிக்கையொன்றை வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்