பிள்ளைகளை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயற்சித்த தந்தை வைத்தியசாலையில்: பெரியநீலாவணையில் சம்பவம்

🕔 March 14, 2024

பாறுக் ஷிஹான்

னது இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று விட்டு, தற்கொலை செய்வதற்கு முயற்சித்த தந்தையொருவர் – கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் நடந்துள்ளது.

தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளையே – முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது – 63) எனும் தந்தை இவ்வாறு கொன்றுள்ளார்.

சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது – 29), முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது – 15) ஆகியோரே தமது தந்தையினால் கொல்லப்பட்டனர்.

மரணமடைந்த பிள்ளைகளின் தாய் 05 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்