வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

🕔 March 13, 2024

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக குழந்தைகள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகலாம் என சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடும் வெயிலின் போது – பிள்ளைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என – குழந்தை நல வைத்திய ஆலோசகர் டொக்டர் சன்ன டி சில்வா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வறண்ட காலநிலை மற்றும் கடுமையான வெயில் நிலைமை மேலும் அதிகரிக்குமானால், வெப்ப அதிர்ச்சி அல்லது வெப்ப அழுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்